பூமி தற்போது மனிதர்கள் வாழும் இடமாக இருப்பது குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ வழிவுள்ளதா என்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி கட்டமைப்புகள் மேற்கொள்ள முடியும் என்ற தகவலை வெளியிட்டனர். ...
ஓக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன். 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனின் ஆண்டுகள் தண்டனையை 9 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றினார். தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த ஆண்டர்சன், சில வாரங்களுக்குப் பின்பு பக்கத்து வீட்டுக்காரரான 41 வயதான ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொன்றது மட்டுமில்லாமல் அவரது இதயத்தை வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது அத்தை மாமாவான லியோன் பை(67) மற்றும் டெல்சி பை ஆகியோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்....
சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியான நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கெர்ம்டெக் தீவுகளில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
ஈரானில் 5000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவி வருகிறது. ஈரானில் மொத்தம் 30 மாகாணங்களில் பள்ளிகள் நடத்தப்படுகிறது. அதில் 21 மாகாணங்களில் படிக்கும் மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் மாணவிகள் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை பரிசோதனை செய்யும் போது அவர்களுக்கு விஷம் அளிக்கப்பட்டது தெரியவந்தது. ...
Megh Updates என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜெனிவாவில் படிக்கும் மாணவர் ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், பல வகையான பேனர்கள் உள்ளன. இந்திய பெண்களை வேலையாட்களாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியதோடு, குழந்தை திருமணம் பற்றி வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவுக்கு எதிரானவை என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் உள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், என்ன காரணத்திற்கு அந்த போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்று தெரியவில்லை....
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 'கோம்' பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாணவிகளை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர்கள் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித் துறை அமைச்சகமும் உறுதி செய்தது. மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக, மத அடிப்படைவாதிகளால் விஷம் வைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம். இதன் மூலம் நமது எதிரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார். அந்த எதிரிகள் யார் என்று அவர் வெளிப்படயாக கூறவில்லை. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத்தான் ஈரான் எப்போது குற்றம்சாட்டும். இதனால், இம்முறை மறைமுகமாக ரெய்சி பேசி இருக்கிறாரா என்று ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கு முன்னதாக, இளம்பெண் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவி பேசும்பொருளானது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எந்தவொரு பள்ளி மாணவியும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்கள் நைஜீரியா நாட்டில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், நைஜர் டெல்டா மகாணம் மைஹா நகர் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் மர்மநபர்கள் சட்ட விரோதமாக கச்சா எண்ணெயை திருட முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இருந்து நெசலோனிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த இரு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது. ரயில்கள் நேருக்கு நேர் மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகளில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் 3 பெட்டிகள் வெடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும், பல பயணிகள் ரயில்களின் இடிபாடுகளிலிருந்து வெளியே குதித்துத் தப்பியுள்ளனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின. இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், ஏராளமான பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 250 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 38 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களும் எதிரெதிர் திசையில் வந்ததே இந்த பயங்கர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது....
கனடாவிலிருந்து தம்பதிகள் இருவர் அனலைதீவில் தங்களின் சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உதவியாக ஒருவரும் அங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அன்று இரவு நேரத்தில் திடீரென முக மூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த தம்பதிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள், உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்....
உக்ரைன் - ரஷ்யா போர் சுமார் ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்த நிலையில், இன்னும் போர் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய பிறகும், உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷ்ய படைகள் பின்வாங்கின. கைப்பற்றிய பகுதிகளை இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. ...