இந்தியா

சீனியரின் காட்டு மிராண்டி செயல்...வீடியோவில் அம்பலமான கொடூரம்

கல்லூரியின் சீனியர் என்.சி.சி வகுப்பில் சரியாக செயல்படாத மாணவர்களை கம்பால் சரமாரியாக அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இருக்கும் பண்டோத்கர் கல்லூரி மிகவும் பழமையான கல்லூரியாகும். இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் என்.சி.சி வகுப்பு நடத்தப்பட்டு பல நல்ல விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியின் என்.சி.சி வகுப்பில் சில மாணவர்கள் சரியாக செயல் பட வில்லை. ...

மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்...மக்கள் கொந்தளிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!

சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பி வைத்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வரா மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் வேற்று சமூகத்தை சேர்ந்த மாணவியின் தண்ணீர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவியின் பேக்கில் லவ் லெட்டர் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டுள்ளது....

டெல்லி மார்க்கட்டில்....மக்களோடு மக்களாக ராகுல் காந்தி...மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!

இன்று அதிகாலை, டெல்லியில் உள்ள அசாத்பூர் மார்கெட்டிற்கு காய்கறி விலை வாசியால் மக்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை தெரிந்துகொள்ள மக்களோடு மக்களாக வலம் வந்துள்ளார் ராகுல் காந்தி. அவரை நேரில் கண்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆச்சிரியமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு கன்னியாகுமாரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” நடந்து சென்றார். இதனை இந்தியாவுக்கான ஒற்றுமை பயணம் என்று கருதி நடை பயணத்தின் வாயிலாக பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து. அதற்கு பின்னர் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபேட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் விவசாயிகள் பயன்படுத்தும் உரம், விதைகள் உள்ளிட்டவைகளின் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார். இதுபோன்று இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அசாத்பூர் மார்கெட்டிற்கு சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வு பற்றியும் மேலும் உயர்த்து வரும் தக்காளியின் விலை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார்.அங்கு அவரை சாதாரண மக்களோடு மக்களாக பார்த்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ...

இளம்பெண் நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. பகீர் காரணம்..

26 வயது மதிக்கத்தக்க தலித் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதுடன், ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள சாரியாவில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், 'கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வரும்படி தனது மொபைலுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அதையடுத்து வெளியே வந்த பார்த்தேன், அப்போது ​​ஒரு ஸ்கூட்டியில் இரண்டு இளைஞர்கள் தனக்காகக் காத்திருந்ததை பார்த்தாகவும், அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக ஒரு காட்டிற்குள் அழைத்துச் சென்றதாகவும் கூறினார். பின்னர், அவர்கள் என் வாயை இறுக்கி, கடுமையாக தாக்கி, என் ஆடைகளைக் கிழித்து, மரத்தில் கட்டி வைத்துவிட்டுச் சென்றார்கள். அரை நிர்வாண நிலையில் இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன். காலையில் மக்கள் என்னை அங்கே பார்த்தார்கள். என்னை மரத்தில் இருந்து அவிழ்க்குமாறு நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்துவிட்டு போலீஸாருக்கு தகவல்கொடுப்பதாக தெரிவித்ததாக' அந்த பெண் கூறினார். இதையடுத்து சரியா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர், குற்றச்செயலில் ஈடுபட்ட விகாஷ் சோனார், ஷ்ரவன் குமார், ரேகா தேவி மற்றும் முன்னி தேவி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் இன்னொரு நபருடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்' என்று தெரிவித்தனர். ...

அய்யயோ 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? | Star Mark Currency Notes

இந்தியாவில் நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி பரவலாக பரவி வருகிறது. அதற்கான விளக்கத்தை ரிசர்வ் வங்கி வெளியுள்ளது. அதாவது, தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளில் நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வெங்கி தெரிவித்துள்ளது. இதனால் அந்த நோட்டுகள் செல்லாது என்று தற்போது பரவி வரும் வதந்தி முற்றிலும் தவறு என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, நட்சத்திர குறியீடு...

கழிப்பறையில் கேமரா.. ஆபாச வீடியோ எடுத்த கல்லூரி மாணவிகள்..

கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகள் அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவியை கழிப்பறையில் இருக்கும்போது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோவை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் வாட்ஸாப் குழுவிற்கு அனுப்பியும் வைத்துள்ளனர். இதை கண்டு அதிர்ந்துபோன கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையில், மாணவியை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ இணையதளத்தில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், உடுப்பி மல்பே போலீசார் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை குறித்து வழக்கு பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட 3 மாணவிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கல்லூரிக்கு நேரில் சென்ற மகளிர் ஆணையத் தலைவர் குஷ்பு, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரியில் படிக்கும் மாணவிகளே சக மாணவியை ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சக மாணவிகளிடையே பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

மேற்கு வங்கத்தில் இருபிரிவினரை பிளவுப்படுத்த பாஜக விருப்பம்..! - முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மணிப்பூரை போன்று, மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி மற்றும் கமதாபுரி இன மக்களிடம் பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் 26 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா என்று கூட்டணிக்கு பெயரும் வைத்துள்ளனர். ஜூன் 24ம் தேதி பீகார் மாநிலம் பட்னாவில் கூடிய ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சியினர், மீண்டும் பெங்களூரூவில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியாதவது, 26 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்திருப்பது மகிச்சியளிக்கிறது. பாரதம் வெல்லும் என்பதே எங்களின் முழக்கம். அடுத்தக்கட்ட திட்டங்கள் இந்தியா கூட்டணியின்கீழ் முன்னெடுக்கப்படும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்தி, அமைதியான தேசம் உருவாக்குவதே எங்களின் நோக்கம். எந்தப் பதவிக்கும் விருப்பமில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தால், அதன்பிறகு நாட்டில் ஜனநாயம் நிச்சயம் இருக்காது. இந்தியா கூட்டணி மற்றும் மேற்கு வங்கம் சார்பில் மணிப்பூர் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறேன். மணிப்பூர் பெண்களின் நிலமை, அவர்கள் மீதான பாஜக அரசின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி, கமதாபுரி இனக்குழுக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது. வன்முறையைத் தூண்டி மாநிலத்தை பிரிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது....

மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் 114பேர் உயிரிழப்பு - எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை வெளியீடு!

மணிப்பூர்: குக்கி சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்துள்ளதாக அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் கடந்த மே 4ஆம் தேதி முதல் பல்வேறு இன்னல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பான விவரங்கள் 75 நாட்களுக்கும் மேலாகி தற்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகின்றன. அந்தவகையில் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்கு குக்கி சமூகத்தை சேர்ந்த இளைஞரின் தலையை துண்டித்து, முகத்தை சிதைத்து, அந்தத் தலையை மூங்கில் குச்சியில் தொங்கவிட்டுச் சென்ற அவலம் அரங்கேறியிருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூரில் மே 4ம் தேதிக்கு பிறகு, இம்பால் கிழக்கில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2 பெண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த இரு சம்பவங்களும் ஒரே நாளில் ஒரு மணி நேரத்திற்குள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டாக அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், நகாரியன் மலைப்பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....

அண்ணாமலையின் நடைபயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்..! - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி!

பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் என் மண்.. என் மக்கள் என்ற நடைப்பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 28ம் தேதி முதல் மேற்கொள்ளும் 'என் மண். என் மக்கள்' எனும் நடைபயணத்தைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க உள்ள நிலையில் நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விடியல...முடியல எனும் வாசகத்துடன் கூடிய ' மக்கள் புகார் பெட்டி ' யை அறிமுகம் செய்து வைத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியாதவது, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யாத்திரைகள் மேற்கொண்டுள்ளனர். தமிழக மக்கள் பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். ஊழலற்ற தூய்மையான, நேர்மையான அரசு அமைய வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி என் மண் என் மக்கள் என்கிற பாதயாத்திரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தூய்மையண ஊழலற்ற நேர்மையான வளர்ச்சியை தரக்கூடிய அரசு வர வேண்டும் என்பதே பாதயாத்திரையின் நோக்கம்.  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களிடம் எடுத்து சொல்லப்படும். 2024 தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை 3வது முறையாக அமைக்கவும் யாத்திரையில் திட்டமிடப்பட்டுள்ளது. திமுகவின் ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சிமுறையையும் அதன் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுவதும் இந்த யாத்திரையின் முக்கிய இலக்கு. வரும் 28ஆம் தேதி யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராமேஸ்வரத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக பாஜகவின் எதிர்கால திட்டமிடல்கள், பயணங்கள் உள்ளிட்ட சிந்தனைகளோடு இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையானது 39 நாடாளுமன்ற தொகுதிகள், 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி யாத்திரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் பாதயாத்திரை, வாகன மூலமாகவும் மக்களை சந்திக்க கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. யாத்திரையின் போது தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்தான 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. பாஜக தலைவரின் கடிதம் ஒரு கோடி குடும்பங்களை சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  யாத்திரையின் போது 11 பொதுக்கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன. அதில், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெருமுனைக் கூட்டங்கள், கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், கிராமங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரையின் தொடக்கமான தமிழக சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கிறது. யாத்திரை நிறைவடையும் போது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். ...

பிரான்ஸ் சுற்றுப்பயணம் நிறைவு..! ஐக்கியஅரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி பிரான்சில் இரண்டு நாள் அரசு முறை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அந்நாட்டிற்குச் சென்றார். அங்கு நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின விழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, வர்ததகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரான்சில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி, இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்பட்டுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இரு தரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தற்போதைய செய்திகள்