அய்யயோ 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? | Star Mark Currency Notes

By Priyanka Hochumin Updated on :
அய்யயோ 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? | Star Mark Currency NotesRepresentative Image.

இந்தியாவில் நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி பரவலாக பரவி வருகிறது. அதற்கான விளக்கத்தை ரிசர்வ் வங்கி வெளியுள்ளது.

அதாவது, தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளில் நட்சத்திர குறியீடு பொறிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வெங்கி தெரிவித்துள்ளது. இதனால் அந்த நோட்டுகள் செல்லாது என்று தற்போது பரவி வரும் வதந்தி முற்றிலும் தவறு என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, நட்சத்திர குறியீடு வைத்திருக்கும் மக்கள் பணம் செல்லாதோ என்று பயப்பட வேண்டாம் என்றும் கூறினர்.

அதே போல் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், பொது மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்