கடந்த சில நாள்களாகவே, பால் கொள்முதல் மற்றும் தொழிலாளர்கள் பற்றாகுறை போன்றவற்றால் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ...
அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக மீது தனி பாசம் கொண்ட அஜித்குமார், நேரடியாக ஆதரவு கொடுக்காமல் இதுபோன்று மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா மறைந்த சமயத்தில் அஜித் தான் அடுத்த அதிமுக தலைமை எனவும் பேசப்பட்டது. அந்த அளவிற்கு அஜித்குமார் - அதிமுகவினர் இடையே நல்ல நட்பு இருக்கிறது....
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முறையற்ற பயிற்சியும், ஆலோசனைகளும் இல்லாததே இதர்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ் நடுக்குத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வருகிறது. 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான பாடிபில்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்....
தேனி மாவட்டம் காமயம் கவுண்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். கட்டிடத் தொழியாளியான இவர் தனது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரவணனுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இவர் எதற்காக இந்த விபரீத செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது பிறப்புறுப்பையே அறுத்துக் கொள்ளும் அளவிற்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் அருகே உள்ள கரப்பாளையம் புதூரில், வீட்டில் தனியாக இருந்த 54 வயதுடைய தங்கமணி என்ற பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட நிலையில் தங்கமணி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஆனால், வீட்டில் பணம், நகை எதுவும் திருட்டு போகவில்லை எனவு கூறப்படுகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்....
பொதுத் தேர்வை ஒட்டி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மாணவர்களின் செல்போன் எண் உட்ப்ட சுய விவரங்கள், ரூ.3000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக, 20 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை தகவல்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியது....
அரசுத் தேர்வுகள் துறையானது, விடைத்தாளை திருத்தம் செய்யும் மையத்திற்கு வரும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் படி, மாணவர்களின் விடைத்தாளைத் திருத்தம் செய்யும் மையத்திற்கு, உள்ளே வரக்கூடிய ஆசிரியர்கள் பணி முடியும் வரை வெளியே செல்லக் கூடாது. அதே போல, மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் குறைத்தோ அல்லது அதிகமாகவோ வழங்கக் கூடாது. மேலும், முறையாக மதிப்பீடு செய்வதுடன், மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்களை மட்டும் வழங்க வேண்டும்....
திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் பிரிதிக்ஷா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பிரிதிக்ஷா அதே பகுதியில் உள்ள அவருடைய பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பிரிதிக்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, அவரை கண்டித்து வீட்டிற்கு சென்று படிக்குமாறு கூறியுள்ளார். அதற்காக வீட்டின் சாவியையும் பிரிதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பார்த்தபோது தம்பதிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, பிரிதிக்ஷா வீட்டு ஜன்னலில் துண்டால் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக பிரிதிக்ஷாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரிதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை படிக்கச் சொல்லி கண்டித்ததால் மனவேதனை தாங்க முடியாமல் பிரிதிக்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை என்றால் என்ன என்று தெரியாத வயதில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், கடந்த 2022 ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்....
பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்ததோடு, பொதுச்செயலாளராக தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....