முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் முக்கியமில்லை..! - எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்

By selvarani Updated on :
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் முக்கியமில்லை..! - எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்Representative Image.

எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் எடப்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் காவடிக்காரனூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதவது,

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டுவந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதே விடியா திமுக அரசின் சாதனை. வரிப்பணத்தில் ரூ.82 கோடியில் கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் தேவையான என மக்கள் கேள்வி கேட்கின்றனர். தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம். ஏனெனில் இரண்டும் ஒரே விலைதான் விற்கிறது. எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் பார்த்துக்கொண்டோம். தமிழகத்தில் மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு குடும்பம்தான் முக்கியம், மக்கள் முக்கியமல்ல. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை விடியா திமுக அரசு முடக்கிவிட்டது.

மேட்டூர் அணை மற்றும் மற்றும் ஏரிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ள அனுமதி வழங்கியது அதிமுக அரசு. வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தையும் திமுக அரசு முடக்கிவிட்டது. ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரிகள் புனரமைப்பு திட்டத்தையும் திமுக அரசு முடக்கிவிட்டது. முதியோர் உதவித்தொகையையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் தகுதியான முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்பான செய்திகள்