டெல்லி மார்க்கட்டில்....மக்களோடு மக்களாக ராகுல் காந்தி...மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!

By poovizhi Updated on :
டெல்லி மார்க்கட்டில்....மக்களோடு மக்களாக ராகுல் காந்தி...மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!Representative Image.

இன்று அதிகாலை, டெல்லியில் உள்ள அசாத்பூர் மார்கெட்டிற்கு காய்கறி விலை வாசியால் மக்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை தெரிந்துகொள்ள மக்களோடு மக்களாக வலம் வந்துள்ளார் ராகுல் காந்தி. அவரை நேரில் கண்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆச்சிரியமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான ராகுல் காந்தி, கடந்த ஆண்டு கன்னியாகுமாரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” நடந்து சென்றார். இதனை இந்தியாவுக்கான ஒற்றுமை பயணம் என்று கருதி நடை பயணத்தின் வாயிலாக பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து.

டெல்லி மார்க்கட்டில்....மக்களோடு மக்களாக ராகுல் காந்தி...மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!Representative Image

அதற்கு பின்னர் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபேட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் விவசாயிகள் பயன்படுத்தும் உரம், விதைகள் உள்ளிட்டவைகளின் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார். இதுபோன்று இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அசாத்பூர் மார்கெட்டிற்கு சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வு பற்றியும் மேலும் உயர்த்து வரும் தக்காளியின் விலை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார்.அங்கு அவரை சாதாரண மக்களோடு மக்களாக பார்த்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்பான செய்திகள்