மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்...மக்கள் கொந்தளிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!

By Priyanka Hochumin Updated on :
மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்...மக்கள் கொந்தளிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!Representative Image.

சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் நிரப்பி வைத்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வரா மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் வேற்று சமூகத்தை சேர்ந்த மாணவியின் தண்ணீர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவியின் பேக்கில் லவ் லெட்டர் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கையில் - கடந்த வெள்ளிக்கிழமை மாணவி மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பேக்கை வகுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளார். உணவை சாப்பிட்டு வகுப்பறைக்கு வந்த மாணவி வாட்டர் பாட்டிலில் இருப்பது தண்ணீர் என்று நினைத்து குடித்துள்ளார். பின்னர் அதில் இருந்து வாடை வந்ததும், மாணவர்கள் அதில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளதை தெரிந்துகொண்டார். உடனே இந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். ஆனால் அவரோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராமத்து மக்களுக்கு தெரிய வர அனைவரும் கடும் கோபத்தில் கொந்தளித்து இருந்தனர்.

திங்கள்கிழமை ஸ்கூல் திறந்ததும் தாஷில்தார் மாற்றும் லுஹரரிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் சம்மந்தப்பட்ட மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று கற்களை வீசி பிரச்சனை செய்தனர். மேலும் கம்புகளை எடுத்துக்கொண்டு மாணவர்களின் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தொடர்பான செய்திகள்