இளம்பெண் நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. பகீர் காரணம்..

By Nandhinipriya Ganeshan Updated on :
இளம்பெண் நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. பகீர் காரணம்.. Representative Image.

26 வயது மதிக்கத்தக்க தலித் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதுடன், ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள சாரியாவில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், 'கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வரும்படி தனது மொபைலுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அதையடுத்து வெளியே வந்த பார்த்தேன், அப்போது ​​ஒரு ஸ்கூட்டியில் இரண்டு இளைஞர்கள் தனக்காகக் காத்திருந்ததை பார்த்தாகவும், அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக ஒரு காட்டிற்குள் அழைத்துச் சென்றதாகவும் கூறினார். 

பின்னர், அவர்கள் என் வாயை இறுக்கி, கடுமையாக தாக்கி, என் ஆடைகளைக் கிழித்து, மரத்தில் கட்டி வைத்துவிட்டுச் சென்றார்கள். அரை நிர்வாண நிலையில் இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன். காலையில் மக்கள் என்னை அங்கே பார்த்தார்கள். என்னை மரத்தில் இருந்து அவிழ்க்குமாறு நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்துவிட்டு போலீஸாருக்கு தகவல்கொடுப்பதாக தெரிவித்ததாக' அந்த பெண் கூறினார்.

இதையடுத்து சரியா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர், குற்றச்செயலில் ஈடுபட்ட விகாஷ் சோனார், ஷ்ரவன் குமார், ரேகா தேவி மற்றும் முன்னி தேவி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் இன்னொரு நபருடன் முறையற்ற தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்' என்று தெரிவித்தனர். 

தொடர்பான செய்திகள்