மகளிர் உரிமைத் தொகை திட்டம்...விண்ணப்ப படிவம் வாங்கலைன்னா...ஆகஸ்ட் 1 வாங்குங்க!

By Priyanka Hochumin Updated on :
மகளிர் உரிமைத் தொகை திட்டம்...விண்ணப்ப படிவம் வாங்கலைன்னா...ஆகஸ்ட் 1 வாங்குங்க!Representative Image.

தமிழக அரசின் அறிவிப்பின் படி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும்.

அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த சலுகையை வாங்க பெண்களுக்கு கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் 24 ஆம் தேதி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விடுபட்ட பெண்களுக்கு விண்ணப்பங்களை தர வரும் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கும். எனவே, தகவல் தெரியாதவர்கள் இருந்தால் உடனே சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் இந்த பணியை முழுமையாக நிறைவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்பான செய்திகள்