மணிப்பூரைப் போல கலவரம் இல்ல.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது..! - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

By selvarani Updated on :
மணிப்பூரைப் போல கலவரம் இல்ல.. தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது..! - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.Representative Image.

மணிப்பூரைப் போல கலவரமாக இல்லாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் தி.மு.க., சார்பில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியாதவது,

சட்டமன்ற தேர்தலில் 13 முறை போட்டியிட்டு 11 முறை என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். எப்படி நீங்கள் ஒரே தொகுதியில் இத்தனை முறை ஜெயித்தீர்கள் என்று என்னை கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்வது என்றைக்கும் என்னுடைய தொகுதி காட்பாடி தொகுதி தான். என்னை தி.மு.க., காரனாக்கியது கழிஞ்சூரை சேர்ந்த ஆசிரியர் தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தார் கலைஞர்.

மணிப்பூரைப் போல கலவரம் இல்ல.. தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது..! - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.Representative Image

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 36 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார். தாய்குலம் என்றும் தழைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை ரூ ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.ஆயிரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. கலைஞர் பள்ளி பிள்ளைகளுக்கு மதிய உணவை 2 முட்டைகளும் வழங்கினார். மு.க ஸ்டாலின் வந்தவுடன் அவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் காலையில் மாணவர்களுடன் சிற்றுண்டி சாப்பிடுகிறார். அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் படிக்க வைக்க இலவச பஸ் பாஸ் உள்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. காட்பாடி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மருத்துவமனை, கல்லூரி கொண்டு வருவேன்னு சொன்னேன். அதன்படி கொண்டு வந்துள்ளேன்.

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் நமக்கு வர வேண்டும். அதற்காக டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் காட்பாடி தொகுதி மக்களுக்கு என்னுடைய கடைமையை செய்ய தவறுவதில்லை. தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழங்கு பிரச்சனை இல்லை. மணிப்பூரைப் போல கலவரம் இங்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தொடர்பான செய்திகள்