தக்காளி விலை உச்சம் - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

By poovizhi Updated on :
தக்காளி விலை உச்சம்  - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை Representative Image.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த சில மாதங்களாக காய்கறி சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் தக்காளி கிலோ ரூ.200க்கு அதிகமாக விற்பனையாகிறது.

எனவே, தக்காளி விலை அதிகரிக்கும் காரணம், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை, தக்காளி விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகளிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம் தக்காளி விலை குறைப்பதற்கான வழியை கூடிய விரைவில் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பான செய்திகள்