நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுடன் புது பானையும் சேர்த்து வழங்க வேண்டும்..! - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.

By selvarani Updated on :
நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுடன் புது பானையும் சேர்த்து வழங்க வேண்டும்..! - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.Representative Image.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொங்கல் திருநாளில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுடன் புது பானையும் சேர்த்து வழங்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சேம. நாராயணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சேலம் ரோட்டரிஅரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சேம.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் பேசியாதவது,

தமிழகம் முழுவதும் 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்கள் பருவ மழை பெய்கின்ற காலத்தில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாது நிலை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் மழை கால நிவாரண உதவியாக மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

மண்பாண்ட தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்க கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்குவதோடு மண்பாண்ட தொழில் செய்யும் நேரத்தில் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு, நியாய விலை கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, புது பானையும் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் சிறப்புகள் குறித்து பள்ளி புத்தகத்தில் ஒரு பாடப் பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் நல வாரிய சட்டங்களை முடக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏரி ,குளம் குட்டைகளில் இலவசமாக மண் அள்ளிக் கொள்ள அரசு , மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது. இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சேம. நாராயணன் பேசினார்.

தொடர்பான செய்திகள்