
புலியை கண்டு பூனைகள் பயப்படலாம் ஆனால், பூனையை பார்த்து புலிகள் பயப்படுமா என்ன என்று எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியாதவது,
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மிகவும் கண்டனத்திற்குரியது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள்தான் நடக்காமல் இருக்க ஒரு கமிட்டி அமைத்து விரைவு சிறப்பு நீதிமன்ற ஆணையம் அமைக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேசுகிறோம். மற்றபடி அந்த சம்பவம் பற்றி பேச மறந்து விடுகிறோம். 19 மதுபான ஆலைகளில் 17 ஆலை திமுக வினருடைது.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கர்நாடகா வழங்க வேண்டிய ஜூன் மாதம் இரண்டு டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் மற்றும் உபரிநீராக முப்பது டிஎம்சி தண்ணீர் வழங்கவில்லை. இது குறித்து முதல்வர் எதுவும் கூறவில்லை. மோடிக்கு எதிராக திமுகவினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகாவில் தண்ணீர் தர மறுக்கின்றனர். உச்சநீதிமன்றம் காவிரி ஆணையம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர்.
2016 கலைஞர் தலைமையில் தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என கோரித்தான் பிரச்சாரம் செய்தோம். தேர்தல் அறிக்கையில் கலைஞரே அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். மது ஒழிப்பு பிரச்சாரத்தில் சசிகுமார் உயிரிழந்தார். மது உணவு மல்ல. மருந்தும் அல்ல அது 220 நோய்களை உருவாக்குகிறது.
மது ஒரு விஷம். அது காலையில் சாப்பிட்டாலும் மதியம் சாப்பிட்டாலும் மாலையில் சாப்பிட்டாலும் விஷம் கேடு விளைவிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி பற்றிய கேள்விக்கு புலியை கண்டு பூனைகள் பயப்படலாம். ஆனால், பூனையைக் கண்டு புலிகள் பயப்படுமா? . இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.