மேற்கு வங்கத்தில் இருபிரிவினரை பிளவுப்படுத்த பாஜக விருப்பம்..! - முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

By selvarani Updated on :
மேற்கு வங்கத்தில் இருபிரிவினரை பிளவுப்படுத்த பாஜக விருப்பம்..! - முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுRepresentative Image.

மணிப்பூரை போன்று, மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி மற்றும் கமதாபுரி இன மக்களிடம் பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத்தேர்தலில் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் 26 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா என்று கூட்டணிக்கு பெயரும் வைத்துள்ளனர். ஜூன் 24ம் தேதி பீகார் மாநிலம் பட்னாவில் கூடிய ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சியினர், மீண்டும் பெங்களூரூவில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியாதவது, 26 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்திருப்பது மகிச்சியளிக்கிறது. பாரதம் வெல்லும் என்பதே எங்களின் முழக்கம். அடுத்தக்கட்ட திட்டங்கள் இந்தியா கூட்டணியின்கீழ் முன்னெடுக்கப்படும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்தி, அமைதியான தேசம் உருவாக்குவதே எங்களின் நோக்கம். எந்தப் பதவிக்கும் விருப்பமில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தால், அதன்பிறகு நாட்டில் ஜனநாயம் நிச்சயம் இருக்காது.

இந்தியா கூட்டணி மற்றும் மேற்கு வங்கம் சார்பில் மணிப்பூர் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறேன். மணிப்பூர் பெண்களின் நிலமை, அவர்கள் மீதான பாஜக அரசின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி, கமதாபுரி இனக்குழுக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது. வன்முறையைத் தூண்டி மாநிலத்தை பிரிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்