அண்ணாமலையின் நடைபயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்..! - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி!

By Selvarani Updated on :
அண்ணாமலையின் நடைபயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்..! - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி!Representative Image.

பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள இருக்கும் என் மண்.. என் மக்கள் என்ற நடைப்பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 28ம் தேதி முதல் மேற்கொள்ளும் 'என் மண். என் மக்கள்' எனும் நடைபயணத்தைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க உள்ள நிலையில் நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று விடியல...முடியல எனும் வாசகத்துடன் கூடிய ' மக்கள் புகார் பெட்டி ' யை அறிமுகம் செய்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியாதவது, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யாத்திரைகள் மேற்கொண்டுள்ளனர். தமிழக மக்கள் பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். ஊழலற்ற தூய்மையான, நேர்மையான அரசு அமைய வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி என் மண் என் மக்கள் என்கிற பாதயாத்திரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தூய்மையண ஊழலற்ற நேர்மையான வளர்ச்சியை தரக்கூடிய அரசு வர வேண்டும் என்பதே பாதயாத்திரையின் நோக்கம். 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களிடம் எடுத்து சொல்லப்படும். 2024 தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை 3வது முறையாக அமைக்கவும் யாத்திரையில் திட்டமிடப்பட்டுள்ளது. திமுகவின் ஊழல் மிகுந்த குடும்ப ஆட்சிமுறையையும் அதன் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுவதும் இந்த யாத்திரையின் முக்கிய இலக்கு. வரும் 28ஆம் தேதி யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராமேஸ்வரத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழக பாஜகவின் எதிர்கால திட்டமிடல்கள், பயணங்கள் உள்ளிட்ட சிந்தனைகளோடு இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையானது 39 நாடாளுமன்ற தொகுதிகள், 234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி யாத்திரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியிலும் பாதயாத்திரை, வாகன மூலமாகவும் மக்களை சந்திக்க கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. யாத்திரையின் போது தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்தான 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. பாஜக தலைவரின் கடிதம் ஒரு கோடி குடும்பங்களை சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

யாத்திரையின் போது 11 பொதுக்கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன. அதில், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெருமுனைக் கூட்டங்கள், கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், கிராமங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரையின் தொடக்கமான தமிழக சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கிறது. யாத்திரை நிறைவடையும் போது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். 

தொடர்பான செய்திகள்