மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் 114பேர் உயிரிழப்பு - எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை வெளியீடு!

By Baskaran Updated on :
மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் 114பேர் உயிரிழப்பு - எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை வெளியீடு!Representative Image.

மணிப்பூர்: குக்கி சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்துள்ளதாக அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் கடந்த மே 4ஆம் தேதி முதல் பல்வேறு இன்னல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பான விவரங்கள் 75 நாட்களுக்கும் மேலாகி தற்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகின்றன.

அந்தவகையில் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்கு குக்கி சமூகத்தை சேர்ந்த இளைஞரின் தலையை துண்டித்து, முகத்தை சிதைத்து, அந்தத் தலையை மூங்கில் குச்சியில் தொங்கவிட்டுச் சென்ற அவலம் அரங்கேறியிருக்கிறது.

மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் 114பேர் உயிரிழப்பு - எம்எல்ஏக்கள் கூட்டறிக்கை வெளியீடு!Representative Image

இந்த நிலையில் மணிப்பூரில் மே 4ம் தேதிக்கு பிறகு, இம்பால் கிழக்கில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2 பெண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த இரு சம்பவங்களும் ஒரே நாளில் ஒரு மணி நேரத்திற்குள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை குகி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் கூட்டாக அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், நகாரியன் மலைப்பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்