வேலைக்கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியா? என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை!

By Nandhinipriya Ganeshan Updated on :
வேலைக்கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியா? என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை!Representative Image.

உலகளவில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. அதிலும் சீனாவில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், சீனா அரசாங்கம் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த பாலிசி மூலமாக பாதிக்கப்பட்ட இடங்கள் முழுமையான ஊரங்குப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க சூழல் நிலவுவதால், வேலை கிடைக்காத காரணத்தால் இளைஞர் பலரும் மனவேதனையில் இருக்கிறார்களாம். 

எனவே, மனதை அமைதிப்படுத்தவும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சீன இளைஞர்கள் வழிபாட்டு தலங்களில் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டை விட கோவிலுக்கும் செல்லும் இளம்தலைமுறையினரின் எண்ணிக்கை தற்போது 310 சதவிகதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எல்லாம் கைவிட்ட பிறகு கடவுள் ஒன்றே துணை அல்லவா!

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்