மத்திய அரசின் தடை எதிரொலியாக அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு - நீண்ட வரிசையில் காத்திருந்து மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்லும் மக்கள்.

By selvarani Updated on :
மத்திய அரசின் தடை எதிரொலியாக அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு - நீண்ட வரிசையில் காத்திருந்து மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்லும் மக்கள்.Representative Image.

இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் தொகையில் பாதி பேரின் உணவுத்தேவையை அரிசி பூர்த்தி செய்து வருகிறது. அவர்களுக்கு தேவைப்படும் அரிசி, 90 சதவீதம் ஆசியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளவில் ஏற்றுமதியாகும் அரிசியில், 40 சதவீதம் இந்தியாவின் பங்கு ஆகும். சீனா, பெனின், செனிகல் மற்றும் டோகோ உள்ளிட்ட நாடுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. சமீப நாட்களாக, இந்தியாவில் வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் 80 சதவீதம் தடைபடக்கூடும். இதனால், உள்நாட்டில் விலை குறையும். சர்வதேச சந்தையில் அதன் விலை உயரும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் அரிசி ஏற்றுமதி தடை எதிரொலியாக பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க, கனடா,சிங்கபூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள பல்வேறு சூப்பர் மார்கெட்டுகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பல மாதங்களுக்கு தேவையான அரிசியை வாங்கிச்செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டும் வழங்கப்படும் என சூர்ப்பர் மார்க்கெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்