இலங்கைக்கு மூட்டை மூட்டையாக பீடி இலை கடத்தல் - போலீசார் விசாரணை

By Baskaran Updated on :
இலங்கைக்கு மூட்டை மூட்டையாக பீடி இலை கடத்தல் - போலீசார் விசாரணை  Representative Image.

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற் பகுதியில் இலங்கைக்கு பீடிஇலைகளை கடத்த முயன்று பின்னர், நடுக்கடலில் குதித்து தப்பித்து ஓடிய கடத்தல் கும்பல் யார் என கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இந்நிலையில் இன்று தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் வனிதா தலைமையிலான கியூ பிரிவு போலீசார் தருவைகுளம் கடற் பகுதிக்கு படகில் சென்று சோதனை செய்தனர். அப்போது கியூ பிரிவு போலீசாரை கண்டதும் படகில் பீடி இலை பண்டலங்களுடன் இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் கடலில் குதித்து தப்பி ஓடியது.

இந்த காட்சிகள் வெளியான நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அதே தருவைகுளம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு பீடிஇலை கடத்துவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைஅடுத்து மீண்டும் கியூ பிரிவு போலீசார் தருவைகுளம் கடற் பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது இலங்கைக்கு கடத்த இருந்த 40 மூட்டை பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். பீடி இலையை கடத்தி கொண்டு வந்த மினி வேனையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் பீடிஇலை கடத்தலில் ஈடுபட்டது யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்