எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது.
அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டு வருகிறது. அவர்களின் முக்கிய இலக்கே மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக ஸ்டார்ஷிப் என்னும் சக்திவாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளனர். இந்த பிரம்மாண்ட ராக்கெட் 400 அடி நீளம் உடையது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடுத்து நிலவு பயணத்திற்கு இந்த ஸ்டார்ஷிப்பை பயன்படுத்த திட்டமிட்டு முன்பதிவு செய்துள்ளது. இதனால் தங்கள் கடின உழைப்பால் உருவான ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெஸ்டிங் செய்ய முடிவெடுத்தனர். எனவே, நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தென் கோடியில், மெக்சிகோ நாட்டு எல்லை அருகே உள்ள போகா சிக்கா கடற்கரை ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தினர். ஆனால் ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெஸ்டிங் என்பதால் நல்ல வேலை அந்த ராக்கெட்டில் மனிதர்கள் யாரும் பிரயாணம் செய்யவில்லை. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் எதனால் வெடித்தது என்பதை கண்டறிந்து மீண்டும் ஸ்டார்ஷிப்பை உருவாகும் முயற்சில் நங்கள் ஈடுபடுவோம் என்று எலான் மஸ்க் அவர்கள் கூறியுள்ளார்.