மறுபடியும் முதல்ல இருந்தா..? சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!

By Gowthami Subramani Updated on :
மறுபடியும் முதல்ல இருந்தா..? சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!Representative Image.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் பேரிழப்பு ஏற்பட்டது. இன்று வரை பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் இருந்து பறவைக் காய்ச்சலுக்கு முதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவைக் காய்ச்சலானது, எச்3என்8 என்ற வைரஸால் ஏற்பட்டுள்ளது.

 

குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர், கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீனாவில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன், கோழிப் பண்ணைக்கு சென்றதாகவும், அவர் சென்ற இடத்தில் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ் இருந்ததும் கண்டறியப்பட்டது.

 

தொடர்பான செய்திகள்
தற்போதைய செய்திகள்