தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவானது யானைக்கு வாழைப்பழம் தர முயன்ற பெண் தராமல் வெறுப்பேற்றியதால் கடுப்பான யானை அந்த பெண்ணை தும்பிக்கையால் தூக்கி வீசியது தான். அந்த வீடியோவை IFS அதிகாரி சுஷாந்தா நந்தா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் "யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள்" என்றும் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் கை நிறைய வாழைப்பழங்களை வைத்துக் கொண்டு யானைக்கு தர முயற்சிக்கிறார். ஆனால் பழத்தை தராமல் யானையை வெறுப்பேற்றுகிறார். இதனால் கடுப்பான அந்த யானை தனது தும்பிக்கையால் அந்த பெண்ணை தூக்கி வீசிவிட்டது. இதன் மூலம் நமக்கு தெரிய வருவது விலங்குகளை எளிதில் ஏமாற்ற முடியாது மற்றும் அவர்களுக்கு உணர்ச்சிகள் இருப்பது என்பது தான்.