
தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று காலை வெளியிட்டது. அதன் படி, தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையானது திமுக அரசு பொறுப்பேற்றது முதலே தாக்கல் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கான நலன் மற்றும் வேளாண் துறை மேம்பாடு போன்றவற்றிற்கென பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், வெளியான அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று மதுரைப் புகழ் மல்லிகைப் பூவை மையமாகக் கொண்டு அறிவித்ததாகும். மதுரை மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், செவகங்கை உள்ளிட்ட இடங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த வேளாண் பட்ஜெட் தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதற்கான சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். அதிலும், குறிப்பாக பருவமில்லா காலங்களில் மல்லிகை உற்பத்தியானது உறுதி செய்யப்படும்.
இத்திட்டமானது தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும். இதற்கான தரமான மல்லியை செடிகள், ராமநாதபுரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதற்கான உரிய காலத்தில் வழங்குவதற்கு வழி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு உரிய காலத்தில் மல்லிகை சாகுபடிகளை மேற்கொள்ளும் வகையில் அதனை நடவு செய்வதற்கு மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மையை மேற்கொள்ளவும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கு இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இது, வரும் ஆண்டில் 7 ரூபாய் ஒதுக்கீடு செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.