
ரேஷன் கடை ஊழியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விவரம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களாக விளங்கும் சேல்ஸ் மேன் மற்றும் பேக்கிங் செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தை அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத் துறை ஆனது, மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆன ஆ. சண்முகசுந்தரம் அவர்கள் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முன்னரே, நியாயவிலக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டது.
இதில் ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் தேர்வு டிசம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகள் முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடைய உள்ள இந்த சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், நியாய விலைக் கடைகளில், பணிபுரிந்து வரக்கூடிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.