பிரசவத்தில் அலட்சியம்...தவறி கீழே விழுந்த குழந்தை இறப்பு...அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமை!

By Priyanka Hochumin Updated on :
பிரசவத்தில் அலட்சியம்...தவறி கீழே விழுந்த குழந்தை இறப்பு...அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமை!Representative Image.

திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் செவிலியரின் அலட்சியத்தால் பிறந்த குழந்தை கை தவறி கீழே விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரசவத்தில் அலட்சியம்...தவறி கீழே விழுந்த குழந்தை இறப்பு...அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமை!Representative Image

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்தார் சந்தியா. இவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதி பிரசவ வழியால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் சிகிச்சை அளிக்கும் போதே பனிக்குடம் உடைந்ததால் உடனே திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரசவத்தின் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த குழந்தையை பெற்றோர்களிடம் காட்ட மறுத்துள்ளனர். குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதனை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் காரணம் கூறியுள்ளனர்.

பிரசவத்தில் அலட்சியம்...தவறி கீழே விழுந்த குழந்தை இறப்பு...அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமை!Representative Image

ஒரு வாரத்திற்கு பின்னர் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தின் போது செவிலியர் ஒருவர் ஒரு கையில் போனுடன் குழந்தையை பிடிக்கும் போது தவறி கீழே விழுந்து குழந்தை இருந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை தீர விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்றும், காரணமாக இருந்த அந்த செவிலியருக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்பான செய்திகள்