
இந்தியாவில் மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அதன் பிறகு, ஆதார் எண்ணை பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31, 2023 ஆம் நாள் முடியும் வரை காலக்கெடு வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குள் ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசு ஆதார் அப்டேட் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டது. அதன் படி, 10 ஆண்டிற்கு ஒரு முறை ஆதார் கார்டை அப்டேட் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். இந்நிலையில், தற்போது ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன் படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களது ஆவணங்களை புதுப்பிக்கும் வசதியை அளித்துள்ளது. மார்ச் 15, 2023 ஆம் நாள் முதல் ஜூலை 14, 2023 ஆம் நாள் வரை ஆதாருக்கான ஆவணங்களை ஆன்லைனிலேயே இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.