தனியாரில் ஜில் ஜிலுன்னு பட்டுப்புடவை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகின்றனர்..! - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு.

By selvarani Updated on :
தனியாரில் ஜில் ஜிலுன்னு பட்டுப்புடவை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகின்றனர்..! - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு.Representative Image.

தனியாரில் ' ஜிலுஜிலுன்னு பட்டுப்புடவை இருப்பதால்,அதை பார்த்தவுடன் மக்களுக்கு வாங்க வேண்டும் என தோன்றுகிறது. மக்களுக்கு உண்மை எது பொய் எது என தெரியவில்லை என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 2 கோடி 50 லட்சம் மதிப்பீடில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தெருவில், கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின், புதிய விற்பனை நிலையத்தினை குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,

கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு வெள்ளி அளவு ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கூட்டுறவு துறைகளில் வழங்கப்படும் பட்டுப் புடவைகளை 6 மாதம் கழித்து கொண்டு வந்தால், சந்தையைப் பொறுத்து விலை அதிகரிக்கும். திமுக அரசு அமைந்த பிறகு தான், நவீன முறையை கொண்டு வந்துள்ளோம்.

தனியாரில் ஜில் ஜிலுன்னு பட்டுப்புடவை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகின்றனர்..! - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு.Representative Image

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திமுக அரசு வந்த பொழுது, 7 கோடி நஷ்டத்தில், 9 கோடி ரூபாய் லாபத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு 400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் 1000 கோடியாக அதிகரிப்போம். நலிவடைந்த சங்கங்களுக்கு ரூபாய் முதலீடுகள் கொடுத்து தொடர்ந்து நலிவடைந்த சங்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறோம். கைத்தறி ரகங்களை விசைத்தறையில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனியாரில் ' ஜிலுஜிலுன்னு ' என இருக்கிறது அதை பார்த்தவுடன் மக்களுக்கு வாங்க வேண்டும் என தோன்றுகிறது. மக்களுக்கு உண்மை எது பொய் எது என தெரியவில்லை. இதனை தடுக்கும் பொருத்து காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டு குறித்து விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

தொடர்பான செய்திகள்