
பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோவில் தகவல் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்வை ஒட்டி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மாணவர்களின் செல்போன் எண் உட்ப்ட சுய விவரங்கள், ரூ.3000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக, 20 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை தகவல்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இது குறித்து, சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரை விசாரிக்க மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசாரின் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, சைபர் கிரைம் போலீசார் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்ட உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பொதுத்தேர்வு எழுதக் கூடிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்டு, கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பிய ஆடியோவை கைப்பற்றி சைபர் கிரைம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.