
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு இந்த மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளரான ராஜேஷ் பூஷன் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் 8 ஆம் நாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,082 பேர் உள்ளனர். மார்ச் 15 ஆம் தேதியன்று, 3,264 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, சென்னை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.