செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை - குளத்தில் இருந்து கருகிய உடலை மீட்டு விசாரணை

By selvarani Updated on :
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை - குளத்தில் இருந்து கருகிய உடலை மீட்டு விசாரணைRepresentative Image.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பெரியமகிபாலன் குளத்தில் உடல் தீயில் கருகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது வடக்கு பரும்பூரை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான முருகன் ஓட்டப்பிடாரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

திருமணம் ஆகாத இவர் கடையில் வியாபாரம் செய்யமால் எப்போதும் செல்போனில் மூழ்கி இருந்துள்ளார். வீட்டிற்கு சென்றாலும் செல்போன் கையுமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் கண்டித்தும் கேட்கவில்லை.. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல சொல் போனை அதிகமாக பார்த்து கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மன வேதனையில் இருந்த முருகன் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குளப்பகுதிக்கு சென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட வாலிபர் முருகனின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்