தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதான வழக்கில் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அவரது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் ஏற்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு பேர் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது. நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை.
இந்திய அரசின் கடமை. பாஜகவினர் முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம். அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு. ரவீந்திரநாத் வழக்கில் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.