திருமண மண்டபங்களில் மதுக்கு அனுமதி இல்லையா?

By Nandhinipriya Ganeshan Updated on :
திருமண மண்டபங்களில் மதுக்கு அனுமதி இல்லையா?Representative Image.

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களிலும் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள்  விளையாட்டு, மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம்.

மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி பெற்று மது அருந்தலாம் என வெளியிடப்பட்ட உள்துறை செயலாளர் அறிவிப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். 

அதாவது, திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற வணிக வளாகங்களில் மதுபானம் வழங்க சிறப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டுகள் நிகழ்வுகளில் மதுபானம் வழங்கும் நடைமுறை ஏற்கனவே பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இதனால், தமிழகத்தில் விளையாட்டு அரங்கங்களுக்கு மட்டுமே மதுபானம் அனுமதிக்கப்படும். ஆனால், திருமண விழாக்களில் மதுபானம் அனுமதிக்க முடியாது என்று கூறுயுள்ளார்.

தொடர்பான செய்திகள்