சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும்..! - வானதி சீனிவாசன் கோரிக்கை.

By selvarani Updated on :
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும்..! - வானதி சீனிவாசன் கோரிக்கை.Representative Image.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை மதம் சார்ந்து பார்க்காமல், குற்றவாளிகளாக இஸ்லாமிய அமைப்புகள் பார்க்க வேண்டும் என்று கேட்டுகொள்வதாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,

தமிழக பாஜக சார்பில் மாநகரம் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் திமுக அரசை கண்டித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எல்லா துறைகளிலும் ஒரு ரேட் போட்டு பணிகள் நடந்து வருகிறது. கோவை குண்டு வெடிப்பு, இந்து இயக்க சகோதரர்கள் படுகொலை போன்ற சம்பவங்களில் ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு அந்த சமூகத்தவர்கள் ஆதரவு தெரிவித்தால் மீண்டும் அந்த செயலை தடுக்க முடியாது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு மத சாயம் கொடுத்து அமைதியை கெடுக்க வேண்டாம். தீவிரவாதிகளை அந்த மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய பாஜக தலைமை இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கவில்லை, அது பத்திரிக்கை செய்தி மட்டுமே. அடுத்த 40 ஆண்டுகளை இலக்காக வைத்து 2,3,4 ஆம் கட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய கட்சியாக பாஜக உள்ளது. இவ்வாறு வாசதி சீனிவாசன் பேசினார்.

தொடர்பான செய்திகள்