வீட்டு வாசலில் விளையாடிய சிறுமியின் தங்க வளையல் மாயம் - மூதாட்டி திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு!

By selvarani Updated on :
வீட்டு வாசலில் விளையாடிய சிறுமியின் தங்க வளையல் மாயம் - மூதாட்டி திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு!Representative Image.

மதுரையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் நகை தங்க வளையலை திருடிச்சென்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை மாநகர் தெற்கு மாசி வீதி பகுதியைச் சேர்ந்தவர் அழகர். இவருடைய மகள் குரல் வெண்பா என்ற சிறுமி வீட்டு வாசலில் சக குழந்தைகளுடன் விளையாட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் விளையாடஅங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்தார்.

பின்னர், யாரும் பார்க்காத நேரத்தில், குரல்வெண்பா கையில் இருந்த ஒரு தங்க வளையலை மட்டும் களைட்டு கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். குழந்தை விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தபோது கையில் தங்க வளையல் இல்லாமல் இருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தெற்கு வாசல் காவல்நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தனர்.

அப்போது, குழந்தையின் கையில் இருந்த தங்கள வளையலை களுட்டி சென்றது அதேபுதியை சேர்ந்த மூதாட்டி வெங்கடேஸ்வரி தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வளையலை திருடியதை ஒப்புக்கொண்ட மூதாட்டியை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்பான செய்திகள்