லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் - காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை!

By selvarani Updated on :
லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் - காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை!Representative Image.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் உதவி ஆய்வாளர் சுந்தர் ராஜ், தொலைந்து போன நில பத்திரம் வழக்கு தொடர்பாக 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தர ராஜ். இவர் பணக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரின் நில பத்திரம் தொலைந்து போனதால், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் இது குறித்து டி.எஸ்.பி., நவீன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியான நிலையில், சுந்தர ராஜ் -யை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே எஸ்.ஐ., சுந்தரராஜ் கைதி ஒருவரை கட்டிலில் கை விலங்குடன் கட்டி வைத்து, தூங்கி கொண்டிருந்த போட்டோ வைரலாகி பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்