எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை - ஆர்.எஸ்.பாரதி

By Baskaran Updated on :
எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை -  ஆர்.எஸ்.பாரதி Representative Image.

சென்னை: எதிர்கட்சி கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடந்து இருப்பதாக திமுக அமைப்பு  செயலாளர் ஆர். எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

மார்ச் 1ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் விழாவில் மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தொடர்பான செய்திகள் பேசப்பட்டது அதிலிருந்து தொடர்ச்சியாக மத்திய அரசு தமிழக அரசுக்கு இன்னல்களை கொடுத்து வருவதாக ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக தான் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டார்கள் அது தொடர்பான வழக்கும் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மீண்டும் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகளின் கூட்டமானது  நடைபெறுகின்ற சூழ்நிலையில் தற்பொழுது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அவரது மகன் கௌதம் சிகாமணி உடைய இல்லங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சோதனை பொருத்தவரை தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்பதற்காக நடைபெற்று வருகிறது

தான் ஒரு வழக்கறிஞர், இருப்பினும் என்னுடனே இந்த சோதனை எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்கு தொடரப்பட்டது அப்படி பார்க்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேல் ஆகிறது. அமலாக்கத் துறையினருக்கு இது போன்ற அதிகாரம் இருக்கின்றதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. இதுவரை அமலாக்கத்துறை போடப்பட்ட வழக்கில் நூறு சதவீதத்திற்கு இரண்டு சதவீதம் கூட நிரூபிக்கப்படவில்லை.

இதேபோன்று கர்நாடகத்தில் வி கே சிவகுமார் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டார்கள் ஆனால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எப்படி படுதோல்வி அடைந்ததோ அதேபோன்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படுதோல்வி அடையும் என்பது ஐயமில்லை என  தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்