அரூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.27லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை!

By Baskaran Updated on :
அரூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.27லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை!Representative Image.

தருமபுரி: அரூர் அருகே விவசாயி வீட்டில் மர்மநபர்கள் ரூ.27லட்சம் பணம், தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடியைச் சேர்ந்தவர் குமரேசன். விவசாயியான இவர் தனது உறவினர்களின் நிலத்தை விற்ற பணம் ரூ.25லட்சம் மற்றும் மாடுகளை விற்ற பணம் ரூ.2.50லட்சத்தை வீட்டில் வைத்துள்ளார். நேற்று குமரசேனும் அவரது மனைவியும் தனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.27.50லட்சம் பணம், 9பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்பான செய்திகள்