முதல்வர் மு.க ஸ்டாலினின் பெங்களூரு பயண விவரம் வெளியீடு

By Baskaran Updated on :
முதல்வர் மு.க ஸ்டாலினின் பெங்களூரு பயண விவரம் வெளியீடு  Representative Image.

சென்னை: பெங்களூரு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பயண திட்டம் விவரம் வெளியாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடக்கும் எதிர்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றுள்ளார். இந்த பயணம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், காலை 10.45 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 11.05 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று 11.20 மணி பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 12.15 மணிக்கு பெங்களூர் விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து புறப்பட்டு 13.05 மணிக்கு சதாசிவ நகர் சென்று தங்குகிறார்.

மீண்டும் மாலை 17.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 17.45 மணிக்கு  தாஜ்வெஸ்ட்என்ட்  ஹோட்டல் சென்று மீட்டிங்கில் கலந்து கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சதாசிவ நகர் சென்று அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் 18.07.2023 காலை 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.45 மணிக்கு தாஜ்வெஸ்ட்என்ட் ஹோட்டல் சென்று அனைத்து கட்சி மீட்டிங்கில் கலந்து கொண்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு சதாசிவ நகர் சென்று தங்குகிறார்.

மாலை 18.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 19.30 மணிக்கு பெங்களூர் விமான நிலையம் வந்து 20.05 மணி பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 21.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 21.30 மணிக்கு இல்லம் வந்து சேர்கிறார்.

தொடர்பான செய்திகள்