முதல்வர் நேரில் அழைப்பு.. தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு..!

By Gowthami Subramani Updated on :
முதல்வர் நேரில் அழைப்பு.. தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு..!Representative Image.

முதல்வர் முகஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று, சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று அதாவது ஏப்ரல் 28-ல் டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவை சந்தித்தார். அவர், சென்னை-கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைத்திட அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மருத்துவமனை, ரூ.230 கோடி செலவில் 6 மேல் தளங்களுடனும், 51,429 சமீ பரப்பளவில் தரைத்தளத்துடன் 1000 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவும் வருவதினால் முக.ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் முர்முவை இந்த விழாக்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் வரும் ஜூன் 5 ஆம் நாள் மருத்துவமனை திறப்பு விழா மற்ரும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா போன்றவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்திகள்