பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம்.. அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!!

By Editorial Desk Updated on :
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம்.. அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!!Representative Image.

திமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.  

இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி, மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை நடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்