ஓ.பி.ரவீந்திரநாத்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

By selvarani Updated on :
ஓ.பி.ரவீந்திரநாத்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதிRepresentative Image.

ரவீந்திரநாத்-க்கும் அதிமுக கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு சுயேட்சை எம்பி என்ற அடிப்படையில் தான் ஓ.பி.ரவிந்திரநாத் அழைக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் நாளை நடத்த உள்ள விலைவாசி உயர்வுக்கான ஆர்ப்பாட்டம் குறித்தும், அதிமுக மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,

ரவீந்திரநாத்-க்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு சுயேட்சை எம்பி என்ற அடிப்படையில் தான் ஓபி .ரவிந்திரநாத் அழைக்கப்பட்டிருப்பார். இயற்கை வளத்தை சுரண்டிய கொள்ளைக்கார கும்பல் அமைச்சர் பொன்முடி. ஏற்கனவே அவர் மகன் மீது ஒரு அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வந்தது. அடுத்து பொன்முடிக்கு ஆரம்பித்துள்ளது. அதற்கு பின் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஆரம்பிக்கும். பொன்முடியை பொறுத்த வரை எப்போது கைதாக போகிறோம் என்ற எண்ணம் அவரை தூங்க விடாது. செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது அரசுக்கு தண்ட செலவு தான். துறையை பார்க்காமல் சிறையில் இருப்பவருக்கு சம்பளம் எதற்கு.

கர்நாடக கூட்டத்தில் காவிரி பற்றி முதலமைச்சர் பேசாததற்கு, முதலமைச்சருக்கு காவிரி பற்றி என்ன கவலை, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள் அது பற்றி கவலைப்படுகிறாரா ? எனக்கே என் வீட்டில் தக்காளி சாதம் கேட்டால் செய்து தருவதில்லை. இந்தியாவின் கொலை மாநிலம் தமிழ்நாடு கொலை நகரம் சென்னை என்றாகிவிட்டது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள். தீவிரவாதிகளை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

எத்தனையோ வழக்குகள் சிறைச்சாலைகளை சந்தித்த ஒரே இயக்கம் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம். டாஸ்மாக் மேம்படுத்த விளக்கம் கொடுக்கிறார் முத்துசாமி. குடியை நியாயப்படுத்தி குடிகார நகரமாக மாற்றுகிறார்கள் . இன்று கூட அலுவலகத்தில் கூட்டம் இருக்கும் நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். எந்த அளவிற்கு அணில் வேலை செய்கிறது பாருங்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

தொடர்பான செய்திகள்