கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்து மரணம்..!

By Priyanka Hochumin Updated on :
கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்து மரணம்..!Representative Image.

சென்னையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து மரணம்.

சென்னையை அடுத்த மாதவரம் அம்பேத்கர் நகர் ஜிஎன்டி சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீரேம் என்பவர் குடியிருந்து வந்துள்ளார். 30 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை தனது வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் நேற்று நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைப் பார்த்து பதறிய நண்பர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை சோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீராம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர்.

தொடர்பான செய்திகள்