'ஓ.பி.எஸ் போராட்ட அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம்..!' - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

By saraswathi Updated on :
'ஓ.பி.எஸ் போராட்ட அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம்..!' - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டுRepresentative Image.

கொடநாடு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலினின் தூண்டுதலே காரணம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவது முதலமைச்சரின் கண்களுக்குத் தெரியவில்லை என்றார். சிறைக்கு சென்றதால் பதவியை உதறியவர் காமராஜர் என்று கூறிய அவர், இன்று சிறை கைதியாக இருக்கும் ஒருவர், அமைச்சர் பதவியை காந்தம்போல் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று சாடினார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் தூண்டுதல் பேரிலேயே ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தை அறிவித்துள்ளதாகக் கூறிய டி.ஜெயக்குமார், எங்கள் மடியில் கனமமில்லை என்றார். மேலும், விடியல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, விடிந்தவுடன் மதுக்கடையை திறக்க முயற்சி நடப்பதாகவும் அப்பாது அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்பான செய்திகள்