அமைச்சர் பொன்முடி திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேச்சு.

By selvarani Updated on :
அமைச்சர் பொன்முடி திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேச்சு.Representative Image.

அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளான அமைச்சர் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கு செல்லவும் வாய்ப்பிருப்பதாக பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், தூய்மை பணி நிறைவேற்றாமல் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை வேலூர் மாநகராட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணைய ரத்தினசாமி அவர்களிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,

வேலூர், மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றிட மாநகர ஆணையர் ரத்தினசாமி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாஜகவினர் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடும் பட்சத்தில் காவல்துறையை பயன்படுத்தி பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். இது கண்டித்தக்க செயல்.

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அமைச்சர் பொன்முடியும் அமலாக்க துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அப்படியே திகார் சிறைக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.

தொடர்பான செய்திகள்