மே 5 ஆம் தேதி விடுமுறை…! குலுங்கப் போகுது மதுரை..

By Gowthami Subramani Updated on :
மே 5 ஆம் தேதி விடுமுறை…! குலுங்கப் போகுது மதுரை..Representative Image.

சித்திரை மாதம் என்றாலே மதுரை மாவட்டத்தின் சித்திரைத் திருவிழா தான். அதற்கான கொண்டாட்டம் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது. சித்திரை மாதத்தில் சிறப்பாக நடைபெறும் சித்திரை திருவிழா மொத்தம் 12 நாள்கள் நடைபெறும் திருவிழா ஆகும்.

இந்த சித்திரை திருவிழாவில் காலை, மாலை என இரு வேளைகளிலும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் காட்சி அருள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சியம்மனின் பட்டாபிஷேகம் இன்று அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் நாளை அதாவது மே மாதம் 1 ஆம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விஜயமும், 2 ஆம் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 3 ஆம் நாள் தேரோட்டமும், நான்காம் நாளுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. மேலும், மே 5 ஆம் நாளான சித்திரை பௌர்ணமி தினத்தில் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மதுரை மாவட்டத்தின் கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்பான செய்திகள்