ரேஷன் கார்டு வைப்பத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.!

By Gowthami Subramani Updated on :
ரேஷன் கார்டு வைப்பத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.!Representative Image.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீப காலமாக, ரேஷன் டிப்போ காரர்களின் நடவடிக்கை மற்றும் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாகவே, அரசு பெரிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன் படி, உணவு மற்றும் வழங்கல் துறை சார்ந்த விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவே முடிவு செய்துள்ளது. அனைத்து மக்களும் இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்றாதவர்களுக்கு ரேஷன் பலன் கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

ரேஷன் டிப்போ ஆபரேட்டர் யாராக இருப்பினும் வீட்டுக்குள் டிப்போவை நடத்தக் கூடாது. தன் வீடு அருகிலேயே இருந்தாலும், கடையிலேயே டிப்போவை நடத்த வேண்டும். மேலும், பியோஎஸ் கருவிகளை இயக்கக் கூடிய அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு நியமனம் செய்வதால் மட்டுமே வழங்க முடியும். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், டிப்போ ஆபரேட்டர்கள் விதிமீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, டிப்போ ஒதுக்கபப்ட்ட இடத்தில் மட்டுமே நுகர்வோருக்கு ரேஷன் விநியோகம் செய்யப்படும் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்