மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்..! - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு

By selvarani Updated on :
மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்..! - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவுRepresentative Image.

மதுபானத்தை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊழியர்கள் புலம்பிவருகின்றனர்.

தமிழத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பத்து ரூபாய் கூடுதலாகவும் அல்லது அதற்கு மேலும் விற்பனை செய்யும் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு டாஸ்மாக் மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அதில், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவெறும் கண்துடைப்பு நாடகம் என மதுப்பிரியர்கள் ஒருபுறம் புலம்பிவருகின்றனர். உண்மையாகவே அக்கறை உள்ளது என்றால், ஒரு செல்போன் எண்ணை அறிவித்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், இந்த எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

அதை விடுத்துவிட்டு, சஸ்பெண்ட் என்ற கட்டுக்கதை எல்லாம் விடுவதாக மதுப்பிரியர்கள் புகார் தெரிவித்தனர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சொல்வதே அரசு தான். இதற்காகதான் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்புறம் எப்படி கூடுதல் விலைக்கு மதுவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது நகைச்சுவையாக இருக்கிறது என்று அவர்கள் கூறினர்.

தொடர்பான செய்திகள்