தொழில் நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்..! - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

By Baskaran Updated on :
தொழில் நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான்..! - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சுRepresentative Image.

சென்னை: தொழில் நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான். தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சந்திரயான்-3 விண்வெளி சாதனைக்கு காரணமானவர் அப்துல்கலாம். அவரை நினைவு கொள்வோம். தொலைநோக்கு பார்வை கொண்டிருந்த‌ அப்துல்கலாமிற்கு நன்றி சொல்வோம் மாணவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும். தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்த ‌வேண்டும்.

தொழில் நுட்பத்தால் அதிக பாதிப்பை சந்தித்தவள் நான் டிரோல் செய்து தொழில் நுட்பத்தால் எனக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள். தொழில் நுட்பத்தை ஆக்க பூர்வமாக பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனலுடன் மாணவர்கள் இருக்க வேண்டும். அதற்கு தொழில்நுட்பம் மாணவர்களுக்கு உதவும். அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். சாதனையாளராக மாறியே தீருவேன் என்ற கனலோடு மாணவர்கள் இருக்க வேண்டும், என்றார்.

தொடர்பான செய்திகள்