சென்னை மெட்ரோவுக்குக் கிடைத்த உலக விருது..! தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் பெருமை..

By Gowthami Subramani Updated on :
சென்னை மெட்ரோவுக்குக் கிடைத்த உலக விருது..! தமிழகத்திற்குக் கிடைத்த மாபெரும் பெருமை..Representative Image.

தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக பசுமை உலக விருதை வென்று சாதனை படைத்துள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ஆனது காற்று தரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இதற்கு அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில், இந்த பசுமை விருது வழங்கப்பட்டது.

இந்த பசுமை உலக விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும். மேலும், சுற்றுச்சூழலில் இதை நேர்மையான தாக்கத்திற்கான அர்ப்பணிப்பு எனலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பல்வேறு முன் முயற்சிகள் மற்றும் நிலையான மாதிரியை கொண்டு மெட்ரோ பயணிகள் மற்ரும் சென்னை மக்களுக்கு நல்ல பயண அனுபவத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொடர்பான செய்திகள்