தமிழக ரயில்வேக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்..! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

By Baskaran Updated on :
தமிழக ரயில்வேக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்..! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்Representative Image.

கோவை: தமிழகத்தில் மேற்கொள்ளவுள்ள ரயில்வே மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவு நிலையத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வத்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு, தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ரயில்வே பணிக்காக ரூ.800கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியாண்டில், மத்திய அரசு, தமிழகத்திற்கு, ரயில்வே மேம்பாட்டுக்காக, 6,000 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதவிர 9ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய ரயில்வே துறையை உலகத்தரம் மிக்க ரயில்வே துறையாக மாற்றப்பட உள்ளது. வெளிநாடுகளில் இயக்கப்படும் புல்லட் ரயில், இந்தியாவில் மும்பை ஆமதாபாத் இடையே இயக்க பணிகள் நடைபெறுகின்றன.

பா.ஜ., 9 ஆண்டுகள் ஆட்சியில், ரயில்வே துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வரும் காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெறும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உட்பட ஐந்து ரயில்வே ஸ்டேஷன்கள், 1800 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

மேலும், 90 ரயில்வே ஸ்டேஷன்கள் அம்ரித் பாரத் திட்டத்தில், மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்துக்கு பிரதமர் மோடி, அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் முக்கியத்துவம் கொடுத்து, நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர். பாரம்பரியமிக்க மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்கள், மேம்படுத்த, தலா 10கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய், ரயில் பாதை மேம்பாடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன், 150 ஆண்டுகள் பழமையானது என்பதால், வரும் ஆகஸ்ட் மாதம் விழா நடைபெற உள்ளது. இந்த ஸ்டேஷனில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், இரண்டு எஸ்குலேட்டர்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

தொடர்பான செய்திகள்